search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபிர் தாஸ்"

    பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உத்திரப்பிரதேசத்திற்கு நாளை பயணம் செய்ய உள்ளார். #PMModi
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலத்தில், 15-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸின் 500-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்ய உள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அம்மாநிலத்தின் சான்ட் கபிர் நகர் மாவட்டத்தில் உள்ள மகர் பகுதியில் அமைந்துள்ள கவிஞர் கபிர் தாஸின் சமாதியில் மோடி சால்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார். அதைத்தொடர்ந்து ரூ. 24 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள கபிர் அகாடமி ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த ஆராய்சி மையம் கபிர் தாஸின் போதனைகள் மற்றும் தத்துவங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட உள்ளது.

    இறுதியாக, மகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிம்மாண்ட பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கபிர் தாஸ் போன்ற மகான்கள் சாதிமுறைகளை ஒழிக்க போராடியதுடன் நாட்டில் சமூக ஒருமைப்பாடு நிலவ பாடுபட்டதாக கடந்த 24-ம் தேதி நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்சியில் பிரதமர் பேசியது குறிப்பிடத்தக்கது.  #PMModi
    ×